இலங்கை பெண்ணுக்கு கிடைத்த பிரித்தானியாவின் உயரிய விருது!
சிறுவர் இல்லமொன்றை நடத்திவரும் டெபோரா எதிரிசிங்கவுக்கு, தன்னார்வத் தொண்டர்களுக்கான பொதுநலவாய விருதின் மூலம் இரண்டாம் எலிசபெத் மகாராணி அங்கீகரித்துள்ளார்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவுவதற்கும் பராமரிப்பதற்கும் எதிரிசிங்க, தன்னார்வ சேவைக்காக 211வது பொதுநலவாய விருது வழங்கப்படுவதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
38 வயதான இவர், 110 தன்னார்வ தொண்டர்கள் குழுவின் ஆதரவுடன் 1,500 குழந்தைகளுக்கான சிறுவர் இல்லமொன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில், குறித்த விருதினை பெறுவதில் நான் மகிழ்ச்சியும், பாக்கியமும் அடைகிறேன் என டெபோரா எதிரசிங்க தெரிவித்துள்ளார்.
"என்னைப் பரிசீலித்ததற்கும், அங்கீகரித்ததற்கும், பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் பெண்களுடனான எனது பணி அதன் வளர்ச்சியையும், ஆதரவையும் வழங்கியமைக்கு நன்றி” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, குழந்தைகளுக்கு கல்வி, சுகாதாரம், வளர்ப்பு மற்றும் ஆதரவு சமூகங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் அவரது பணி பாராட்டத்தக்கது" என்று பிரித்தானிய உயர் ஆணையர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உதவும் இந்த சிறந்த பயணத்தைத் தொடர அவரை வாழ்த்துகிறேன்." எனவும் பிரித்தானிய தூதுவர் கூறியுள்ளார்.
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan