சுவிட்சர்லாந்திற்கும் இலங்கைக்கும் நேரடி விமான சேவை
கொழும்புக்கும் சூரிச் நகரத்திற்கும் இடையில் வாரத்திற்கு இரண்டு முறை விமானங்களை இயக்க எடெல்வைஸ் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் சனிக்கிழமையும் விமான சேவைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சூரிச் வழியாக பயணிக்கும் பயணிகள், சுவிஸ் மற்றும் லுப்தான்சாவுடன் ஐரோப்பாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள பல இடங்களுக்கு அணுகலை பெறுவார்கள்.
சுவிஸ் விமான நிறுவனம்
சுவிஸ் எயார்லைன்ஸ் குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சுவிஸ் எயார்லைன்ஸ் எடெல்வைஸ், இலங்கைக்கான குளிர்கால விமானங்களின் தொடக்கத்தை குறிக்கும் வகையில், இந்த பயணம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பிற்கான சுவிஸ் தூதர் சிரி வால்ட்டின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஒரு சிறப்பு வெளியீட்டு நிகழ்வை நடத்திய போது இதனை குறிப்பிட்டுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 18 மணி நேரம் முன்

619 விக்கெட் வீழ்த்திய ஜாம்பவானின் சாதனையை முறியடித்த ஜடேஜா! சச்சின், கோஹ்லியும் கூட இல்லை News Lankasri
