எட்கா ஒப்பந்தம் நாட்டுக்குப் பாதிப்பானது: விமல் வீரவன்ச விமர்சனம்
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் எதிர்வரும் நாட்களில் செய்து கொள்ளப்படவுள்ள எட்கா வர்த்தக ஒப்பந்தம் நாட்டுக்குப் பாதிப்பானது என்று விமல் வீரவங்க விமர்சித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நேற்று(30.01.2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
நாட்டுக்கு பாதகமான நிலைமை
இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர் ரணில் விக்ரமசிங்க மக்கள் ஆணையைப் பெறாதவர். அத்துடன் பலவீனமான ஆட்சியாளர். பொதுமக்களின் ஆணை இல்லாத ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிகாரம் வழங்கியதன் மூலம் ஏற்பட்ட அனர்த்தங்களுக்கு போராட்டக்காரர்களும் கோட்டாபயவும் தான் பொறுப்புக் கூற வேண்டும்.
இந்த நாட்டின் தற்போதைய ஆட்சியாளர் பலவீனமாக இருப்பதால், நாட்டுக்கு பாதகமான நிலைமைகளுடன் எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச போன்றவர்கள் இவ்விடயத்தில் மௌனம் சாதிக்கின்றனர்.
அவர்கள் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அடிமைகளாக மாறியுள்ளனர் என்றும் வீரவங்ச தொடர்ந்தும் விமர்சித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
