சீன தூதுவரை சந்தித்தார் சஜித் (Photo)
இலங்கை அரசியலில் ஒரு ஸ்தீரமற்ற நிலை உருவாகியுள்ள பின்னணியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சீனத் தூதுவரை இன்று சந்தித்து பேசியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த அனர்த்தமான தருணத்தில் இலங்கைக்கு சகோதரத்துவக் கரம் நீட்ட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சீனத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிப்படைத் தன்மையுடன் நாட்டை நிர்வகித்தல், இலஞ்சம், ஊழல், அடக்குமுறைகளை ஒழிப்பது என்பனவே தனது நிர்வாகத்தில் முதன்மையானதாக இருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய நிலையிலிருந்து மீள்வதற்கு சீனாவின் பெருந்தன்மையான ஆதரவு மிகவும் அவசியமானது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தூதுவர் தலையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் கலந்துகொண்டார்.






16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
