நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி! மனித நேய செயற்பாடுகளில் ஈடுபடும் மக்கள்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையானது மக்களை பெரும் கஷ்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
அதிலும் குறிப்பாக டீசல், பெற்றோல் என்பவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு நாட்டை முடக்கியுள்ளது. பயணங்களை மேற்கொள்ள முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
இதேவேளை நாட்டின் நிலைமை சுமூகமாக இருந்த போதே ஒரு வேளை உணவிற்கு கூட போராடி வந்தவர்களின் நிலைமை தற்போது இன்னும் மோசமடைந்துள்ளது. இந்த நிலைமையில் இலங்கையர்கள் பலர் மனித நேய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
உணவுக்கு கஷ்டப்படும் மக்களுக்கு தம்மால் முயன்ற உதவிகளை அவ்வாறானவர்கள் செய்து வருகின்றனர். அந்த வகையிலேயே யாழ்ப்பாணத்தை சேர்ந்த செயற்பாட்டாளரான இளைஞர் உமாகரன் ராசையா பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை பகிர்ந்தளித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அவர் இவ்வாறான உதவிப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமையை பலரும் பாராட்டியுள்ளனர்.