மக்களின் போராட்டம் நியாயமானது – ரஞ்சன் ராமநாயக்க
மக்களின் போராட்டம் நியாயமானது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றில் தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன், ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை ஒன்றுக்காக வருகை தந்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள் ஆணைக்குழுவிற்கு அழைத்துச் சென்ற போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எரிவாயு, எரிபொருள் என பல்வேறு பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலை உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலி முகத் திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நியாயமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போராட்டத்தை முன்னெடுத்து வரும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
போராட்டத்திற்கு தடை ஏற்படுத்தக் கூடாது எனவும் அவர் கோரியுள்ளார்.
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி News Lankasri