மகிந்த பதவி விலக தீர்மானம் எடுக்கலாம் - பசில் வெளியிட்ட தகவல்
மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை கருத்திற் கொண்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக தீர்மானம் எடுக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான இன்றைய சந்திப்பின் போது பசில் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அவ்வாறானதொன்று நடந்தால், புதிய அரசாங்கத்தின் புதிய பிரதமருக்கான வேட்புமனுக்களை கட்சித் தலைமைக் குழுவொன்று கோரினால், மகிந்த ராஜபக்சவைத் தவிர வேறு யாரையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிறுத்தாது என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவே பிரதமர் பதவியை வகிக்க வேண்டும் என்பது கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்படுத்திய இணக்கப்பாடு எனவும், அந்த மக்கள் ஆணையைத் தவிர வேறு யாரையும் நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இல்லை எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு ஆதரவாக போரில் ஈடுபடும் ரஷ்யா: மத்திய கிழக்கில் காத்திருக்கும் ஆபத்தான நாட்கள் News Lankasri
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam