இலங்கையின் திவால் நிலைமை தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய தகவல்
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“சமகால நெருக்கடி நிலையில் சம்பளம் தொடர்பில் மாற்றுப் பிரேரணையை முன்வைக்க வேண்டும். வங்கிகளை மறுசீரமைக்க வேண்டும். இல்லையெனில் வங்கிகள் இல்லாமல் போய்விடும். பேசுவதற்கு ஒன்றுமில்லாத நிலைமை ஏற்படும்.
எப்படியாவது வெளியேற வேண்டும்
அந்த இரண்டையும் செய்ய வேண்டும். இது நடந்து கொண்டிருக்கும் போது, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு இல்லாமல் பேச்சுவார்த்தைக்கு செல்ல முடியாது.
செப்டம்பர் மாதத்திற்குள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை முடித்து, திவால் முடிவை நீக்க விரும்புகிறேன். நாங்கள் இப்போது சேற்றில் சிக்கியிருக்கிறோம். ஆனால் எப்படியாவது வெளியேற வேண்டும். இது மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரும் நிதிச் சலுகைகள் மற்றும் சலுகைகள் தொடர்பில் அரசாங்கம் பரிசீலிக்க முடியும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |