இலங்கைக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்க ரஷ்யா விருப்பம் - மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பு
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் றொஸ்னெல்ப்ட் உட்பட ஐந்து அரச எண்ணெய் நிறுவனங்கள் இலங்கைக்கு குறைந்த விலையில் எரிபொருளை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த எண்ணெய் நிறுவனங்கள் மொஸ்கோவில் இருந்து எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயைப் பெறத் தவறிய பத்து மேற்குலக நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் உக்ரைனுக்கு உதவுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரஷ்ய அரச எண்ணெய் நிறுவனங்கள் இலங்கைக்கு ஒரு பீப்பாய்க்கு 35 டொலர்களை குறைவாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. இதேவேளை, இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான எரிவாயு ஒப்பந்தத்தின் கால எல்லை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலங்கை ரஷ்ய எரிவாயு நிறுவனத்திடம் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியும்.
ஐந்து இந்திய எண்ணெய் நிறுவனங்களும் ரஷ்யாவிடம் இருந்து 7 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை வாங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருக்கும் பிரச்சனையில் பழைய வில்லன் என்ட்ரி, நந்தினி, ரேணுகா எப்படி சமாளிக்க போகிறார்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam