வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மரணத்தின் எதிரொலி! முடங்கியது வடமராட்சி (Live)
கடந்த வியாழக்கிழமை காணாமல்போயிருந்த வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவரும் இன்று வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதன் எதிரொலியாக வடமராட்சி மீனவர்கள் மெஎற்கொண்ட சாலை மறியல் போராட்டம் தொடர்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீதிக்கு குறுக்காக மீன்பிடி படகுகள், மரக்குற்றிகள் என்பன போடப்பட்டு வீதி முற்றாக மறுக்கப்பட்டு போராட்டம் இடம்பெறுகின்றது.
தமக்கு நீதி கிடைக்கும் வரை தமது போராட்டம் இடம்பெறுமெனவும், அதுவரை தங்களது படகுகளை வீதிக்கு குறுக்காக போட்டு போராட்டம் நடாத்த போவதாகவும் அறிவித்துள்ளனர்.
சக்கோட்டை முதல் தொண்டமனாறு வரை முற்றுமுழுதான பொது போக்குவரத்துகள் முடங்கியுள்ளதுடன், மீனவர்கள் வீதிகளில் நின்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இப்போராட்டத்தில் போராடும் மக்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.









தவெக கேட்ட இடத்தில் அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம் News Lankasri

தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
