ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை அறிந்தும் மௌனம் காக்கும் அரசாங்கம்.. முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!

2019 Sri Lanka Easter bombings Sri Lanka Easter Attack Sri Lanka Eastern Province
By Kumar Apr 22, 2026 10:05 AM GMT
Report

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளைக் கைது செய்தால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே அரசாங்கம் மௌனம் காப்பதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் செல்வகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக நேற்று மாலை ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு இளைஞர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அருட்தந்தை யூட் நிலக்ஸன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் செல்வகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  

இதன்போது தீபச்சுடர் ஏற்றப்பட்டதுடன் வீதியின் இரு மருங்கிலும் ஒளியேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.  

மத்திய கிழக்கு போர்! மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் பதிவாகும் அதிரடி மாற்றம்

மத்திய கிழக்கு போர்! மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் பதிவாகும் அதிரடி மாற்றம்

பிரார்த்தனை முன்னெடுப்பு  

அத்துடன், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கான செயற்பாடுகளை அரசு விரைவாக முன்னெடுக்கவேண்டும் எனவும் இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

இதனை தொடர்ந்து, அருட்தந்தை யூட் நிலக்ஸனால் ஆத்மசாந்தி பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டதுடன் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அது குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயல்பாட்டாளர் இளையதம்பி செல்வகுமார் உரையாற்றினார்.

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை அறிந்தும் மௌனம் காக்கும் அரசாங்கம்.. முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு! | Eater Blast Goverment Did Not Take Action

இந்த கோரத் தாக்குதலில் 225 இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 269 பேர் உயிரிழந்ததுடன், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய ஜனாதிபதி பதவிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தான் ஆட்சிக்கு வந்த 6 மாதங்களுக்குள் நீதியை நிலைநாட்டுவேன் என்ற அவரது வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தினார்.

புலனாய்வுத் தகவல்கள்

அத்துடன் கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் புலனாய்வு அதிகாரி சுரேஷ் சாலே ஆகியோர் கைது செய்யப்பட்டதையும், அவர்களிடமிருந்து சாட்சியங்கள் திரட்டப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை அறிந்தும் மௌனம் காக்கும் அரசாங்கம்.. முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு! | Eater Blast Goverment Did Not Take Action

அண்மையில் நாடாளுமன்றத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு அமைச்சர் தாக்கல் செய்த அறிக்கையில், தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதை அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

அந்த அறிக்கைகளை மறைத்த அதிகாரிகள் யார் மற்றும் அவர்கள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

இறுதியாக, தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பது அரசாங்கத்திற்குத் தெரிந்திருந்தும், அவர்களைக் கைது செய்தால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே அரசாங்கம் மௌனம் காப்பதாக அவர் சாடினார்.

அரசாங்கம் உண்மையாகவே மக்களின் நலனில் அக்கறை கொண்டதாக இருந்தால், உடனடியாக குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை அறிந்தும் மௌனம் காக்கும் அரசாங்கம்.. முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு! | Eater Blast Goverment Did Not Take Action

முழுமையாக சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறிய மகிந்த

முழுமையாக சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறிய மகிந்த

ஈரானுடனான தொடர்பிலுள்ள 14 நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள அதிரடி தடை

ஈரானுடனான தொடர்பிலுள்ள 14 நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள அதிரடி தடை

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US