ஊடகவியலாளர்களின் படுகொலைகள்.. அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பிலும் ஆவணங்களை சமர்ப்பித்தும் அதன் நீதியை நிலைநாட்டுவதில் அநுர அரசு பின் நிற்கின்றது என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முறைப்பாடு
மேலும், "ஊடகவியலாளர்களை கையாள்வதற்கு அநுர அரசாங்கத்திற்கு நேரமில்லையா பதவிக்கு வந்தவுடன் எக்னெலிகொட, லசந்த உட்பட படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி பெற்று தருவேன் பாதிக்கப்பட்ட ஊடக நிறுவனங்களுக்கு நீதியை பெற்று தருவேன் என்றவர் தான் அநுர.
சுகிர்தராஜன், நிமலராஜன்,சிவராம், நிலக்சன் என அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களதும் நீதி நிலைநாட்ட படவேண்டும்.
நான் என்னுடைய கையால் எனது ஊடக நிறுவனத்திற்கு இடம்பெற்ற 40 சம்பவங்கள் குறித்து அவர் எமது நிறுவனத்திற்கு வந்த பொழுது கொடுத்தும் எந்தவித நன்மையும் இல்லை.
வடக்கு கிழக்கிலுள்ள எந்த ஊடகவியலாளர்களுக்கும் நீதி நிலைநாட்ட படவில்லை ஆனால் நாங்களும் பல தடவைகள் முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். ஒரே எண்ணத்தில் உள்ளவர்களை உருவாக்க அரசு முயற்சிக்கிறது" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
