காலிமுகத்திடல் தாக்குதலை கண்டித்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (Photos)
காலிமுகத்திடலில் கோட்டா கோ ஹோம் கம மீது இடம்பெற்ற தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பு - ஊறணி சந்தியில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து ஊறணி சந்தியில் நேற்று இரவு 7 மணிக்கு, காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலைக் கண்டித்து பல்வேறு வசனங்கள் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறு, கோசங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஊறணி சந்தியிலிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாக ஆரம்பித்து பிள்ளையாரடி வரையும் சென்று அங்கு சுமார் அரை மணிநேரம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.

இந்த ஆர்ப்பாடத்தையடுத்து அந்த பகுதியில் இருக்கும் இராஜாங்க அமைச்சர்
எஸ்.வியாழேந்திரனின் வீட்டிற்குள் ஆர்ப்பாட்காரர்கள் நுழைவார்கள் என்ற
அச்சத்தையடுத்து அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri