கிழக்கு பல்கலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்
கிழக்கு பல்கலை மாணவர்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று(09.02.2024) பிற்பகல் 4.30 மணியளவில் கொம்மாதுரை பகுதியில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் பேரணியாக வந்த மாணவர்கள் கிழக்கு பல்கலைக்கழக முன்றலில் ஒன்று கூடி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மகாபொல கொடுப்பணவு
இதன் போது தற்போது வழங்கும் மகாபொல கொடுப்பணவை அதிகதிரிக்க வேண்டும், புதியதாக இணைந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த 6 மாதமாக மகாபொல வழங்கப்படவில்லை, மாணவர்கள் தங்கும் விடுதியில் மருத்துவ வசதி இல்லை , நிரந்தர வைத்தியர் வேண்டும், இரண்டாம் வருட மாணவர்களுக்கு விடுதி இல்லை, விரைவில் வழங்குவதாக கோரியும் விடுதி வழங்க இழுத்தடிப்பு செய்கின்றமை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
