கிழக்கு மாகாண காணி பிரச்சினை தொடர்பில் செயலமர்வு (photos)
கிழக்கு மாகாண காணி பிரச்சினை மற்றும் தேசிய காணி கொள்கை தொடர்பில் மக்கள் காணி ஆணைக்குழுவின் அறிக்கையை சிபாரிசு செய்வதற்கான செயலமர்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த செயலமர்வானது நேற்றைய தினம் (19.03.2023) அம்பாறை - நிந்தவூர் பகுதியில் உள்ள அட்டப்பளம் தனியார் விருந்தினர் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் கிழக்கு மாகாண மட்டத்தில் உள்ள பல்லின அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
செயலமர்விற்கான ஏற்பாடு
குறித்த செயலமர்வினை காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி மற்றும் மனித எழுச்சி நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இதன்போது காணி தொடர்பிலான பல்வேறு விளக்கவுரைகள் வளவாளர்களால் வழங்கப்பட்டதுடன், கருத்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்ட மனித எழுச்சி நிறுவன செயற்பாட்டாளரும், சமூக செயற்பாட்டாளருமான கே.நிஹால் அகமட் இச்செயலமர்விற்கு தலைமை தாங்கியுள்ளார்.
கலந்து கொண்டவர்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன், தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் ஆகியோர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.எம்.நௌஸாத் , கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலப்பத்தி, முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உள்ளிட்டோரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
