கிழக்கு மாகாண இடமாற்ற சபையை புறக்கணிக்கப் போவதாக முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கம் அறிவிப்பு
கிழக்கு மாகாண இணைந்த சேவை உத்தியோகத்தர்களது 2023 ஆண்டிற்கான வருடாந்த இடமாற்றுச் சபை தவிசாளராக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் நியமிக்கப்படுமிடத்து குறித்த இடமாற்ற சபையின் அமர்வுகளை புறக்கணிக்கப் போவதாக அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்தும் சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் ஏ ஜி முபாரக் ஒப்பமிட்டு கிழக்கு மாகாண ஆளுநர், மாகாண பிரதமர் செயலாளர் மற்றும் பிரதிப் பிரதம செயலாளர் ஆகியோர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
பிரதேச சபையில் பதவி நிலை உதவியாளர்
கிழக்கு மாகாணத்தில் எந்த ஒரு பிரதேச சபையிலும் இல்லாதவகையில், வவுணதீவு பிரதேச சபையில் பதவி நிலை உதவியாளர் எனும் பதவி உருவாக்கப்பட்டு, அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவிக்கான பொறுப்புகளாக முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கு உரிய கடமைகள் வழங்கப்பட்டுள்ளது.
இப்பிரதேச சபையில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என்னும் பதவி இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளமை, தொழிற்சங்க முன்னெடுப்புகளுக்கு பொருத்தமான தீர்வை பெற்றுக் கொடுக்க தவறியமையே இதற்கான காரணம் என சுட்டிக்காட்டி உள்ளனர்.
அத்துடன் இது தொடர்பாக பொது நிர்வாக அமைச்சு செயலாளரின PA/CS/6/2/combined இலக்க 2021.01.17 மற்றும் 14/2013 இலக்க 2013.07.14 அம் திகதி சுற்றறிக்கை மற்றும் இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்பட்ட CS/DOS/21/01/02 இலக்க 2017.04.19 சுற்றறிக்கைகளுக்கு மாற்றமான செயல்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளார்.
சக தொழிற்சங்கங்களுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கை
இவ்வாறான அதிகாரியினால் தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்துக்களை கவனத்தில் கொண்டதாக, வருடாந்த இடமாற்றுச் சபையின் செயல்பாடுகள் நியாயமான முறையில் அமையாது என கருதுவதால் இந்த இடமாற்றச் சபையை புறக்கணிக்கும் விடயத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு கிழக்கு மாகாணத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சக தொழிற்சங்கங்களான இலங்கை அரசாங்கப் பொதுச் சேவைகள் சங்கம், வடகிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம், அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் ஆகியவற்றுக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்த கடிதம் அனைத்து முக அமைப்பு சேவை உத்தியோகத்தர்கள்
தொழிற்சங்கத்தின் தலைவர் ஏ ஜி முபாரக்கினால் இன்று 2022.08.27 இலங்கை
அரசாங்கப் பொதுச் சேவைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ புஹாதுவிடம் அவரது
அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது