சித்திரவதைகளுக்குள்ளான நிலையிலேயே தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்: கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம்
இந்த நாட்டில் வாழும் தமிழர்கள் கொடூரமான சித்திரவதைகளுக்கு தொடர்ச்சியாக உள்ளாகிய நிலையிலேயே வாழ்ந்துவருவதாக கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச லோகநாதன் குருக்கள் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காவது நாளான நேற்று(15) மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் நடைபெற்றது.
அகவணக்கம்
கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் ஆலயம் முன்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது.
கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ லோகநாதன் குருக்கள் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வில் கல்குடா சைவக்குருக்கள் ஒன்றியம் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது இறுதி யுத்ததின்போது படுகொலைசெய்யப்பட்டவர்களின் ஆத்மாசாந்திக்காக ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து இறுதி யுத்த காலப்பகுதியில் மக்கள் உணவாக கொண்ட உப்பில்லா கஞ்சி பகிரும் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் குருமார்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.








காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri
