மட்டக்களப்பு மாவட்ட எம்பிக்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் விசேட சந்திப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள நிலமைகள் மற்றும் அதன் பாதிப்புக்கள் தொடர்பாகக் கண்காணித்து, ஆராய்வதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னாயக்க, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பான பாதிப்புக்களை கண்காணித்து ஆராய்வதற்காக விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் நேற்று (29) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மாவட்டத்தின் பட்டிப்பளை, வெல்லாவெளி, வவுணதீவு, போரதீவுப்பற்று, கிரான், சித்தாண்டி, வாகரை என சகல பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மக்கள், அவர்களுக்கான போக்குவரத்து, தற்காலிக படகு சேவை, சுகாதாரம், நீர் விநியோகம், அத்தியாவசிய தேவைகள் எவ்வாறு கிடைக்கின்றன என்பது தொடர்பில் ஆளுநர் கேட்டறிந்து கொண்டார்.
முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்
அத்துடன், அங்கு அமைக்கப்பட்டுள்ள 56 இடைத்தங்கல் முகாம்கள் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளிடம் அவர் ககலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, காத்தான்குடிப் பிரதேசத்தில் வெள்ள நீரை விடவும் அதிகமாக வாவிநீர் ஊருக்குள் புகுந்ததனால், அதனை அண்டிய பகுதியில் பல வீடுகள் பாதிக்கப்பட்டன.
இதனால், அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான நிவாரண உதவிகள் தொடர்பாக ஆளுநரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா எடுத்துரைத்துள்ளார்.
மேலும், காத்தான்குடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவுகளை பிரதேச செயலகம் மற்றும் பள்ளிவாசல்கள், சமூக அமைப்புக்கள் ஊடாக வழங்கி வருவதாக ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக ஆளுநர் 500 உலர் உணவு பொதிகளை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜெஸ்டினா முரளிதரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், உட்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.









6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
