கிழக்கு ஆளுநர் மற்றும் ஐ. நா சனத்தொகை நிதியத்துக்கான பிரதிநிதி சந்திப்பு
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் இலங்கை - மாலைதீவுகளுக்கான ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்துக்கான (UNFPA) பிரதிநிதி குன்லே அதேனிக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது
குறித்த சந்திப்பானது நேற்று (10) நடைபெற்றுள்ளது.
ஆளுநரின் தொடர்ச்சியான ஆதரவு
கலந்துரையாடலின் போது, கிழக்கு மாகாணத்தில் உள்ள சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளுக்கு ஆதரவளிக்க பல்வேறு பங்குதாரர்களுடன் UNFPA இன் தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அதேனி உறுதியளித்துள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுவர்களின் ஆரோக்கியம், பாலின சமத்துவம் மற்றும் காலநிலை மீள்தன்மை போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்துவதை அவர் முன்னிலைப்படுத்தியதோடு, இந்த முயற்சிகளில் ஆளுநரின் தொடர்ச்சியான ஆதரவினை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டள்ளார்.
இதற்குப் பதிலளித்த ஆளுநர், கிழக்கு மாகாணத்தின் பல் கலாசாரத் தன்மையை அங்கீகரித்து, அதன் பன்முகத்தன்மையை பலமாகப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆளுநரின் பதவிக்காலம்
மேலும், மாகாணத்தில் சமூக மற்றும் இன நல்லிணக்கத்தையும், பாலின சமத்துவத்தையும் மேம்படுத்துவதே தனது முதன்மையான கவனம் என்று கூறிய ஆளுநர், குடும்ப வன்முறைகள் அதிகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டி, பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

அதெனி, ஆளுநரை சந்தித்ததையிட்டு, நன்றி தெரிவித்ததோடு, ஆளுநரின் பதவிக்காலத்திற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
ஆளுநரின் தலைமையில் கிழக்கு மாகாணம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையும் என்றும் அவர் மேலும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan