நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் தீவிரப்படுத்தப்படும் பாதுகாப்பு
எதிர்வரும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்கவை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்
மேலும், கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று நாட்டில் உள்ள மூன்று தேவாலயங்கள் மற்றும் பிரபல ஹோட்டல்கள் உள்ளடங்களாக 8 இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு பெருமளவானோர் கொல்லப்பட்டதுடன் மிக அதிகமானோர் படுகாயமடைந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவம் நடந்து 6 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்ள கிறிஸ்தவர்கள் தயாராகி வருகின்றனர்.
மேலும் எதிர்வரும் 20ஆம் திகதி கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் நிலையில், நாட்டிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
