நாடளாவிய ரீதியில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தின வழிபாடுகள் (Photos)
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மறுதினம் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் உயிர்த்த ஞாயிறு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் நேற்றைய தினம் (08.04.2023) இரவு நாடளாவிய ரீதியில் மக்கள் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் , பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வழிபாடு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு ஆலய விளக்குகள் அணைக்கப்பட்டு புது தீமுட்டி மெழுகுதிரி ஏற்றி உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்களினால் இந்த உயிர்த்த ஞாயிறு விசேட வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன்போது, ஜேசு பிரான் உயிர்த்தெழும் நிகழ்வினை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்டிருந்த திருச்சொரூபம் ஆயரினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மேலும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளின்போது உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவரது ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
- கிருஷ்ணகுமார்
புத்தளம்
புத்தளம் சாந்த மரியா ஆலயத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் ஈஸர் தின ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன. ஆலய அருட்தந்தை நிலங்க நிர்மானின் தலைமையில் திருப்பலி கூட்டாக ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஈஸ்டர் பண்டிகை ஆராதனை பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து திருப்பலியை ஒப்புக்கொடுத்துள்ளனர்.
- அசார் தீன்
மன்னார்
உயிர்த்த ஞாயிறு திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று (சனிக்கிழமை) இரவு 11.15 மணிக்கு இடம்பெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கல் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.
திருவிழா திருப்பலி இடம் பெற்ற போது ஆலயத்தை சூழ இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையும் திருவிழா திருப்பலி ஆலயங்களில் ஒப்புக் கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
- லம்பார்ட் எஸ்.ஆர்.
யாழ்ப்பாணம்
யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவ தேவாலயங்களில் கூட்டுத் திருப்பலி ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் மரியன்னை பேராலயத்தில் புனித உயிர்த்த ஞாயிறு கூட்டுத் திருப்பலி இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இவ் கூட்டுத் திருப்பலி யாழ். மரியன்னை பேராலயத்தின் பங்குத்தந்தையும். மறைமாவட்ட ஆயரும் ஆகிய கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஒப்புக்கொடுத்துள்ளார்.
இதில் பலபாகங்களிலிருந்து வருகைதந்த கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு ஆசீர்வாதத்தினை பெற்றுச்சென்றுள்ளனர்.
- கஜிந்தன்
நுவரெலியா
நுவரெலியா மாவட்டத்தில் பிரதான வழிபாடு ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் முன்னெடுப்பட்டுள்ளன.
ஆலய பங்குத் தந்தை நியூமன் பீரிஸ் தலைமையில் இந்த உயிர்த்த ஞாயிறு விசேட வழிபாடுகள் நடாத்தப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு விசேட கூட்டுத்திருப்பலி ஆயர் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் புனித தீர்த்தமும் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21இல் நடாத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதலையடுத்து, குறித்த ஆராதனைகளில் இம்முறையும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- கிருஷாந்தன்
மேலும், ஹட்டன் திருச்சிலுவை ஆலயம், வவுனியா, இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் உள்ள பல தேவாலயங்களில் உயிரித்த ஞாயிறு வழிபாடுகள் நடைபெற்றது. கிளிநொச்சி ஜெபாலய மிசன் தேவாலயத்தில் விசேட வழிபாட்டில் மக்கள் கலந்துகொண்டனர். முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் விசேட நற்கருணை வழிபாடு இடம்பெற்றது. இதேவேளை, கிளிநொச்சி அங்கிலிகன் திருச்சபையிலும் விசேட வழிபாடு இடம்பெற்றது.















இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
