சஹ்ரான் குழுவின் சூத்திரதாரிகள்: நான்கு பேருக்கும் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
வவுணதீவில் இரு பொலிஸாரை வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்த, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் குழுவைச் சேர்ந்த நான்கு பேரையும் எதிர்வரும் ஜூன் 25 ம் திகதி முன்னிலைப்படுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார்.
வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சாவடியில் 2018ம் ஆண்டு 29 ஆம் திகதி இரவு கடமையில் இருந்த பொலிஸ் சார்ஜன்ட் நிரோசன் இந்திர பிரசன்னா, பொலிஸ் கான்ஸ்டபிள் தினேஷ் ஆகிய இரு பொலிஸார் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஜ.எஸ்.ஜ.எஸ் சேர்ந்த சஹ்ரானி குழுவைச் சேர்ந்த கபூர் மாமா என அழைக்கப்படும் சஹ்ரானின் சாரதியான முகமது சர்ப் ஆதம்லெப்பை, மில்ஹான், பிரதோஸ். நில்காம் ஆகிய 4 பேரையும் சிஐடியினர் கைது செய்திருந்தனர்.
வழக்குத் தாக்கல்
இதையடுத்து 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு திங்கட்கிழமை (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பில் இருந்து இந்த நால்வரும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரடப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போதே நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri