உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கடமையாற்றிய புலனாய்வு அதிகாரி பணி நீக்கம் - செய்திகளின் தொகுப்பு
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றபோது கட்டானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு சார்ஜன்ட் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட கடமைகளை செய்யத் தவறியமைக்காக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இது குறித்து ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆரம்ப விசாரணையின் அடிப்படையில் அவருக்கு எதிராக 12 ஒழுக்காற்று மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டதால் அந்த அதிகாரியை பொலிஸ் மா அதிபர் பணி இடைநீக்கம் செய்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,