ஈஸ்டர் தாக்குதலிலே தொடர்புபட்டவர்களை தண்டிப்பது கனவாகவே உள்ளது.. செல்வம் அடைக்கலநாதன் ஆதங்கம்
ஈஸ்டர் தாக்குதலிலே தொடர்புபட்டவர்கள் கலம் கடந்தும் தண்டிக்கப்படுவது என்பது கானல் நீராகவே இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சபை மண்டபத்தில் இன்று (04-04-2026) நடைபெற்ற மாகான சபை முறைமைகளும் அதிகார பகிர்வும் எனும் கருத்தாடல் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து குறிப்பிடுகையில், "ஈஸ்டர் தாக்குதல் தொடர்புல் இந்த அரசாங்கம் பல்வேறு சம்பவங்களை செய்து வருகின்றது என்பதை நான் இங்கு குறிப்பிட வேண்டும் அந்த வகையிலே பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கையாக உள்ளது.

அந்த மரித்த ஆத்மாக்களுக்கு செய்யும் பணியாக அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் உதய கம்மன் விலவினுடைய புத்தக வெளியீட்டுக்கு சஜித் போனாரோ அல்லது போகாமல் இருந்தாரா என்பது அவர்களது உள்வீட்டு விவகாரம் சஜித் பிரேமதாச ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலே அவரும் இந்த நாடாளுமன்றத்திலே உயிர்த்த ஞாயிறு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை கூறி இருக்கிறார்.
ஆகவே அந்த உயிர்த்த ஞாயிறு சம்பவத்திற்க நியாயம் கேட்க வேண்டிய ஒரு முக்கியமான பதவியிலே இருக்கின்றவர் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
நீதி விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் சஜித் பிரேமதாச தன்னுடைய கருத்தை வெளிப்படையாக சொல்ல வேண்டும் அவர் எதிர்க்கட்சித் தலைவர் ஒரு பொதுவான எண்ணத்தைக் கொண்டிருக்கின்றார்என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்திய ரீதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் தாக்குதல்கள் - குவைத்தில் முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல்
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 22 மணி நேரம் முன்
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri