ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அநுர வழங்கிய வாக்குறுதி.. பெரும் காத்திருப்பில் கத்தோலிக்க திருச்சபை
கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதியுடன் ஆறு ஆண்டுகள் கடக்கின்றன.
இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பான பல நபர்கள் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த மார்ச் 30ஆம் திகதி அன்று மாத்தறை, தெய்வேந்திரமுனையில் தெரிவித்தார்.
அவர், "உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முறையான முறையில் நடைபெற்று வருகின்றன. தாக்குதல்களின் ஆண்டு நிறைவு ஏப்ரல் 21 அன்று மீண்டும் நினைவுகூரப்படும்.
எதிர்வரும் ஏப்ரல் 21..
அந்த திகதிக்கு முன்னர் தாக்குதல்களுக்குப் பொறுப்பான கணிசமான எண்ணிக்கையிலான நபர்களை அம்பலப்படுத்த குற்றப் புலனாய்வுத் துறை விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறது" என்று கூறினார்.

இந்நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிரில் காமினி, ஏப்ரல் 21 ஆம் திகதி வரை காத்திருப்பதாகவும், புதிய அரசாங்கத்தின் அறிக்கையில் வலுவான நம்பிக்கை இருப்பதாகவும் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
முன்னதாக, பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக புதிய அரசாங்கம் நீதி வழங்கும் என்று தெரியவில்லை என்றும், இல்லையெனில், புதிய அரசாங்கத்திற்கு எதிராக அவர்கள் வீதிகளில் இறங்க வேண்டியிருக்கும் என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri