மர்மமாக இருக்கும் ஈஸ்டர் குண்டுதாக்குதல்கள்! குற்றவாளிகளாக சிறைசென்று புலனாய்வாளர்களாக வெளியில் வந்த அதிசயம்
இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் குண்டுதாக்குதல்கள் தொடர்பான உண்மைகள் இன்னும் மர்மமாகவே இருந்து வருகின்றன. இந்த தாக்குதலின் பின்னணியில் இலங்கை புலனாய்வு பிரிவினர் சிலர் இருப்பதாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஈஸ்டர் குண்டுதாக்குதல்களுடன் தொடர்புபட்டிருந்த பலர் இதுபற்றி கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பல முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், கடந்தவாரம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சிஐடியினர் சமர்ப்பித்த அறிக்கையொன்றில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருந்தார்கள்.
மேலும், சஹ்ரான் தொடர்பான சாட்சியங்களை வெளியிட்ட சாட்சிகள் மிக சிறியதாக இருந்தாலும் அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் சிறைக்கு சென்ற சஹ்ரான் தரப்பினர், பின்னர் சிறையில் இருந்து புலனாய்வாளர்களாக வெளியில் வந்துள்ளனர்.
இந்த விடயங்களை விரிவாக ஆராய்கின்றது உண்மைகள் நிகழ்ச்சி...