உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்! மக்களுக்கு அறிவிக்கப்படவுள்ள புதிய தகவல்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் வெளிவரும் புதிய விடயங்களை தேவையான நேரத்தில் மக்களுக்கு அறிவிப்போம் என்று பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இதில் மறைப்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கு எதுவும் இல்லை எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் புலனாய்வு செய்து விசாரணை செய்ய ஒரு ஆணைக்குழுவே நியமிக்கப்பட்டிருந்தது.
அந்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கடந்த 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
மேலும் விசாணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அதுதொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.
அதன் பிரகாரம் சட்டமா அதிபரால் பரிந்துரைக்கப்படும் இறுதி பரிந்துரையை அடிப்படையாகக்கொண்டு எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள் அரசாங்கம் பின்வாங்காமல் நடவடிக்கை எடுக்கும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு, ஜனாதிபதி விசாரணை குழுவினால் வழங்கப்பட்டிருக்கும் பரிந்துரைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலாேசனையின் பிரகாரம் முறையாக செயற்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
