தற்கொலை குண்டுதாரியை சந்தித்த புலனாய்வு அதிகாரி! மாத்தளையில் பிறப்பிக்கப்பட்ட கட்டளை - வெளிவரும் தகவல்கள்

2019 Sri Lanka Easter bombings Champika Ranawaka Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Channel 4 Easter Attack
By Benat Sep 09, 2023 05:03 PM GMT
Report

தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டுத்தாக்குதலை நடத்த சென்ற ஜமீலை புலனாய்வு அதிகாரி ஒருவர் சந்தித்துள்ளார். அத்துடன் புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் மாத்தளைக்கு சென்று பிறிதொரு அடிப்படைவாதியிடம் இந்த தாக்குதலை இதனை ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல் என்று ஏற்றுக்கொள்ளுமாறு கட்டளைப் பிறப்பித்ததாக  நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

பணத்துக்காக விடுதலைப் புலிகளின் தலைவரிற்கு பிள்ளையானால் நேர்ந்த கதி: ஹிருணிக்கா பகிரங்கம் (Video)

பணத்துக்காக விடுதலைப் புலிகளின் தலைவரிற்கு பிள்ளையானால் நேர்ந்த கதி: ஹிருணிக்கா பகிரங்கம் (Video)

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ராஜபக்சர்கள்  குறிப்பிடுவது சிறுபிள்ளைத்தனமானது.

மகிந்த ஏற்றுக்கொண்ட விடயம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கெடம்பே ரஜமஹா விகாரைக்கு ஒருமுறை சென்று 'தாங்கள் அடிப்படைவாதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே அந்த அடிப்படைவாத என்ன? அதன் உறுப்பினர்கள் யார் என்பதை தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலே, கபில ஹெந்த விதாரண, முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் நாட்டு மக்களுக்கு குறிப்பிட வேண்டும்.

தேசிய தௌஹீத் ஜமாதே அமைப்பு யாருடையது, தேர்தல் காலத்தில் தௌஹீத் அமைப்பு ராஜபக்சர்களுக்கு  செயற்படவில்லையா, 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சர்களுக்கு  வாக்களிக்குமாறு தௌஹீத் அமைப்பு குறிப்பிடவில்லையா, பௌத்தர்கள் மத்தியில் அடிப்படைவாதம், கருத்தடை தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்தி விட்டு மறுபுறம் தௌஹீத் அமைப்பை தமது அரசியல் நோக்கத்துக்காக பயன்டுபடுத்திக் கொள்ளவில்லையா என்பதை ராஜபக்சர்கள் நாட்டு மக்களுக்கு குறிப்பிட வேண்டும்.

தற்கொலை குண்டுதாரியை சந்தித்த புலனாய்வு அதிகாரி! மாத்தளையில் பிறப்பிக்கப்பட்ட கட்டளை - வெளிவரும் தகவல்கள் | Easter Attack Sri Lanka 2019  

இராணுவ புலனாய்வு பிரிவு,தேசிய புலனாய்வு பிரிவு என்பனவற்றின் கவனத்துக்கு அப்பாற்பட்ட வகையில் சஹ்ரான் செயற்பட்டுள்ளார்.

சர்வதேச மட்டத்தில் இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகள் தீவிரமடைந்த பின்னணியில் 2010 முதல் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தௌஹீத் அமைப்பு அரசியல் நோக்கத்துக்காக அரச அனுசரனையுடன் பாதுகாக்கப்பட்டது.

உலகில் எந்த நாட்டு புலனாய்வு பிரிவும் குண்டுதாரியின் வீட்டுக்கு செல்லாது. தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டுத்தாக்குதலை நடத்த சென்ற ஜமீலை புலனாய்வு அதிகாரி ஒருவர் சந்தித்துள்ளார். அத்துடன் புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் மாத்தளைக்கு சென்று பிறிதொரு அடிப்படைவாதியிடம் இந்த தாக்குதலை இதனை ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல் என்று ஏற்றுக்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.

உலகில் எந்த நாட்டிலும் இவ்வாறான புலனாய்வு பிரிவு கிடையாது. ஆகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்கூட்டியதாகவே பலவிடயங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன. ஆகவே தற்போது எவரும் தப்பிக்க முடியாது.

குண்டுத்தாக்குதல் தொடர்பில் பல விடயங்களை வெளிக்கொண்டு வர முயற்சித்த சானி  அபேசேகரவை ராஜபக்சர்கள்  கொல்லாமல் கொன்றார்கள்.

மனசாட்சியில்லாமல் அவரை நெருக்கடிக்குள்ளாக்கினார்கள். ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் தேசிய புலனாய்வு பிரிவு தற்போது அபகீர்த்திக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ச குடும்பம் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள செய்த விடயங்கள் சர்வதேச மட்டத்தில் பேசப்படுகிறது. இதனால் தேசிய புலனாய்வு பிரிவு சர்வதேச மட்டத்தில் மலினப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையை திருத்திக் கொள்ளாவிட்டால் ஒட்டுமொத்த மக்களும் நெருக்கடிக்குள்ளாக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். 

இலங்கைக்கு கிடைத்துள்ள பெருந்தொகை டொலர்கள்: மத்திய வங்கியின் அறிவிப்பு

இலங்கைக்கு கிடைத்துள்ள பெருந்தொகை டொலர்கள்: மத்திய வங்கியின் அறிவிப்பு

ராஜபக்சக்களைக் கூண்டோடு சிறையிடுங்கள்: ரணிலிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

ராஜபக்சக்களைக் கூண்டோடு சிறையிடுங்கள்: ரணிலிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

சஹ்ரான் ஹாசிமின் சகோதரரை நான் சிறையில் சந்தித்தேன் : பிள்ளையான் வெளியிடும் விபரங்கள்

சஹ்ரான் ஹாசிமின் சகோதரரை நான் சிறையில் சந்தித்தேன் : பிள்ளையான் வெளியிடும் விபரங்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US