டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியான சாராவின் மரணம்! மீண்டும் பெரும் சர்ச்சை - திடீரென கண்டுபிடிப்பு

Sri Lanka Bomb Blast 2019 Sri Lanka Easter bombings Ranil Wickremesinghe Easter Attack Sri Lanka Mujibur Rahman
By Benat Apr 09, 2023 03:51 PM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறும் சாரா என்னும் புலஸ்தினி தொடர்பில் மூன்றாவது முறையாக  டி.என்.ஏ பரிசோதனையை மேற்கொண்டு அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கின்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ளது. எனினும், இதுவரையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும், குற்றவாளிகளுக்கு தண்டனையையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. எதிர்காலத்திலும் தீர்வு கிடைக்காது. இதன் பின்னணியில்    அரசியல்வாதிகளின் சூழ்ச்சி காணப்படுகின்றது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது

டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியான சாராவின் மரணம்! மீண்டும் பெரும் சர்ச்சை - திடீரென கண்டுபிடிப்பு | Easter Attack Sri Lanka 2019

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவிக்கு வந்த பிறகு, உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய தரப்பினருக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். இன்று வரையில் அவரும் மௌனம் காக்கிறார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தீவிரவாத முஸ்லிம் குழுவொன்று நடத்தியதாக கூறப்பட்டாலும், நாட்டில் ஆட்சி  மாற்றமொன்றை கொண்டு வருவதற்காகவே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதல் இடம்பெற்று 4 வருடங்கள் கடந்துள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதில் இன்று வரையில் இழுபறி நிலை காணப்படுகிறது. இதன் பின்னணியில் சில அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகள் இருப்பதையே இது பிரதிபலிக்கிறது.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் உண்மைகளை கண்டறிய முன்னதாக காணப்பட்ட குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு பதிலாக புதிய பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபயசேகரவை கைதுசெய்ததுடன், குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் ரவி செனவிரத்னவையும் வீட்டுக்கு அனுப்பினார்கள்.

இவ்வாறு உயர் அதிகாரிகளை விரட்டி தமக்கு சாதகமான புதியவர்களை பதவிகளுக்கு கொண்டு வந்தனர். இருப்பினும், இந்த புதிய குழுவினரால் இன்று வரையில் எதுவித உண்மைகளும் கண்டறியப்படவில்லை.

இதேவேளை மூன்றாவது முறையாக சாராவின் டி.என்.ஏ பரிசோதனையை மேற்கொண்டு அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கின்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. காரணம், இவ்வளவு காலம் கண்டறியப்படாத இவ்விடயம் தற்போது திடீரென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாருடைய தேவையை பூர்த்தி செய்வதற்காக மூன்றாவது முறையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது?

நாட்டில் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக அப்பாவி மக்களின் உயிரை பறித்தனர். இனங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தி மோதலை உருவாக்கினார்கள்.

இந்த மோதல்களின் போதும் கலவரங்களின் போதும் பலர் உயிர், சொத்துக்கள், உடமைகள் என பலவற்றை இழந்தனர். எதை எதிர்பார்த்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோ, அதனை சிலர் நிறைவேற்றிக்கொண்டார்கள். இனவாதத்தின் ஊடாக ஆட்சி அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்காகவே மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பதை மக்களும் தற்போது புரிந்துகொண்டுள்ளார்கள்.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவிக்கு வந்த பிறகு உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய தரப்பினருக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். இன்று வரையில் அவரும் மௌனம் காக்கிறார்.

எதிர்காலத்தில் தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கப் போவதுமில்லை. தாக்குதல் மேற்கொண்ட தரப்பினருக்கு தண்டனை கிடைக்கப் போவதுமில்லை  என தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US