ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள்: பாஹிங்கல ஆனந்த சாகர தேரர் தகவல்
கொடூர குற்றமான ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் கடந்த அரசாங்கத்தை சேர்ந்த சிலர் மாத்திரமல்லாது தற்போதைய அரசாங்கத்தை சேர்ந்தவர்களும் இருப்பதாக பாஹிங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளும் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டிற்குள் இது சம்பந்தமான நியாயமான விசாரணை நடக்கவில்லை என்றால், சர்வதேசத்திற்கு சென்று நியாயத்தை நிறைவேற்றிக்கொள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்னெடுத்து போராட்டத்திற்கு ஆதரவளிக்கப்படும். அத்துடன் இது குறித்து தான், எதிர்காலத்தில் சர்வதேச பௌத்த தலைவர்களுக்கு தெளிவுப்படுத்தலை ஆரம்பிக்க உள்ளதாகவும் பாஹிங்கல ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri