உயிர்த்த ஞாயிறு வழக்குத் தீர்ப்பு : மறைக்கப்பட்ட பல சர்ச்சைக்குரிய தகவல்களை அம்பலப்படுத்தும் புலனாய்வாளர்....
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் 24 பேருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் பல சர்ச்சைக்குரிய தகவல்களை தொழில்முறை புலனாய்வு பத்திரிகையாளர், இலங்கை விமானப்படையின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியுமான கீர்த்தி ரத்நாயக்க வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் குறிப்பிட்ட விடயங்கள்..
இரகசியமாக பேணப்படும் கைது
உயிர்த்த ஞாயிறு தீர்ப்பு வெளிவந்த பின்னர் அரச புலனாய்வு பிரிவில் இருந்த ரஞ்சித் செனரத் பண்டார உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பரவலாக பேசப்பட்டவர். இவர் கைது செய்யப்பட்ட விடயத்தை அரசாங்கம் மிகவும் இரகசியமாக வைத்துள்ளது.
ஏனெனில் 'சொனிக் சொனிக்' என்ற கதையை இந்த நபர்தான் சொன்னார். அப்படியிருக்கும் போது அந்த இரு வசனங்களின் ஆரம்ப எழுத்துக்களை 'SS' சுரேஷ் சலே என்றும் ஒரு வாதத்தை உருவாக்க முடியும்.
கைது செய்யப்பட்டவர் பெரும்பாலும் அரசுத் தரப்புச் சாட்சியாக மாற வாய்ப்புள்ளது. அதனால்தான் இந்த விடயத்தை இரகசியமாக கையாண்டு வருகிறார்கள் என்று தெரியவந்தது. மேலும் இந்த வழக்கிற்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அல்ல.

கடந்த அரசாங்கங்களின் காலத்திலேயே இந்தக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அதனடிப்படையில்தான் நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பேருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இலங்கையில் நீதிமன்ற மேசையின் மீது வைக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்படும். இந்தக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது சலே மற்றும் அப்போதைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பாக இருந்த சர்ச்சைக்குரிய பிரசன்ன அல்விஸ்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சொன்ன கதையில் அல்விஸ்தான் இந்த ஆதாரங்களை உருவாக்கினார் என்று கூறுகிறார்கள். 'என்னிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்றார்கள் என்னை அடித்தார்கள் அச்சுறுத்தினார்கள் என்னிடம் பாலியல் லஞ்சம் கேட்டார்கள்' என்றெல்லாம் சொல்கிறார்கள். ஒரு நீதிமன்றம் தண்டனை வழங்குவது ஆதாரங்களின் அடிப்படையில்தான்.
விசாரணைகள் நடந்த விதம்
இதில் ஆதாரங்களாக இருப்பது குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள். தங்க நகைகள் வியாபாரம் செய்யும் ஒருவர் இந்தத் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரசாயனங்கள் பயன்படுத்த உதவியதாக விசாரணைப் பிரிவு குற்றம் சாட்டுகிறது.
ஆனால் அந்த முஸ்லிம் சந்தேகநபர் 'இல்லை இது எனது வியாபாரத்திற்கு உரியது சட்டப்பூர்வமாக நான் செய்யும் வியாபாரத்திற்காகப் பயன்படுத்தப்படும் இரசாயனம்' என்று கூறுகிறார்.
இவ்வாறான சர்ச்சைக்குரிய ஆதாரங்களே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவர்கள் இப்போது சொல்கிறார்கள் 'நாங்கள் இதற்கு எதிராக மேன்முறையீடு செய்வோம் எதிர்காலத்தில் பல விடயங்களை வெளிப்படுத்துவோம்' என்று.
நௌபர் மௌலவி ஏற்கனவே சவால் விடுத்துள்ளார் 'நான் இதுவரை சொல்லாத ஒரு கதையை வெளிப்படுத்துவேன்' என்கிறார். அவர்கள் குற்றம் சாட்டுவது நீதிமன்றத்தின் மீது அல்ல. அவர்களுக்கு நீதிமன்றத்துடன் எந்தப் பிரச்சினையும் இல்லை.
சாட்சியங்களை மேசைக்குக் கொண்டு வருவது விசாரணைப் குழுக்கள். மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பில்தான் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஏனெனில் நானும் இந்த நபர்கள் பலரைக் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அவர்களுடன் நேரடியாகப் பேசி உரையாடியுள்ளேன்.
கோட்டாபயவால் பதவி பறிக்கப்பட்ட அதிகாரியைக் கொண்டே காய் நகர்த்தும் அநுர தரப்பு! பல சூழ்ச்சிகள் அம்பலம்
you may like this video
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri