உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை: இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் நிலைப்பாடு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை விடயத்தில் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினரும், கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் ஒரே கருத்தையே கொண்டுள்ளனர்.
விசாரணைக்கு அழைப்பு
இதன்படி, வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் ஈடுபாட்டுடன் உள்ளூர் விசாரணைக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேராவை மேற்கோள்காட்டி திருச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் கர்தினால் ரஞ்சித்துக்கும், ஆயர் பேரவைக்கும் இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக காட்டுவதற்கு ஜனாதிபதி முயற்சி எடுத்துள்ளதாக அருட்தந்தை பெரேரா இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நேர்காணலின் போது ஜனாதிபதி கூறிய விடயம்
ஜேர்மன் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போது கூறியபடி ஜனாதிபதி, தன்னையோ அல்லது ஆயர்கள் மாநாட்டையோ சந்திக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி, ஒரு வருடத்திற்கு முன்னர் தம்மை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும் அருட்தந்தை பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam