உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: ஹரீனுக்கு எதிரான விசாரணை குறித்து நீதிமன்றம் அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகளை நிறைவு செய்யுமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (13.09.2023) உச்ச நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ஹரின் பெர்னாண்டோ சில நாட்களுக்கு முன்னர் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்ற அறிவிப்பு
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மேற்கண்டவாறு அறிவித்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக் கோப்புகளை ஆராய்ந்த சட்டமா அதிபர், இது தொடர்பான விசாரணையை நிறைவு செய்யுமாறு மனுதாரரான ஹரின் பெர்னாண்டோவிடம் பணிப்புரை விடுத்ததாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
எனினும் இந்த மனு தொடருமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் வகையில் ஜனக் டி சில்வா அங்கம் வகிக்காத நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அதனை எதிர்வரும் 18ஆம் திகதி அழைப்பதற்கும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam