உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளில் மைத்திரிபால பிரதானமானவர்: சாடும் பொன்சேகா
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டு பிரதான சூத்திரதாரிகளில் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என முன்னாள் இராணுவதளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் இராணுவதளபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
தாக்கப்பட்ட சரத்பொன்சேகா
முன்னாள் இராணுவ தளபதியால் தனது இராணுவ தலைமையகத்தை கூட பாதுகாக்க முடியவில்லை என மைத்திரிபாலசிறிசேன தெரிவித்ததை தொடர்ந்தே இந்த வாக்குவதம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் சரத்பொன்சேகா தாக்கப்பட்டவேளை அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டன என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள சரத்பொன்சேகா, "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரிகள் இருவரில் ஒருவர் மைத்திரிபால சிறிசேன" என தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
