இலங்கையில் முக்கிய புள்ளியின் கைதால் கதி கலங்க போகும் உலகம் - அதிகாரியின் இரகசியம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடந்த ஓரிரு தினங்களாக தென்னிலங்கை ஊடகப் பரப்பில் பல விடயங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
அந்தவகையில், உயர்நிலை பதவிகளுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையான பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தாக்குதல்களின் பின்னணியில் இந்தியா செயற்பட்டதாக கூறினார் என வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் எமது ஊடகம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளம் கண்டுவிட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரட்ன தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவங்கள் ஒருபுறம் இருக்க மற்றுமொரு அதிர்ச்சி தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




