பிள்ளையான் எழுதிய ஈஸ்டர் படுகொலை நூல்
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கினைப்புக் குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர் படுகொலை இன - மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும் நூல் வெளியிட்டு விழா இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு நேற்றையதினம் (24.03.2024) மட்டக்களப்பில் இடம் பெற்றது. சர்வமத தலைவர்களின் ஆசியுரை, நிகழ்வுகள் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து, நூலாசிரியரினால் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நூலின் முதல் பிரதிகள் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளிற்கு வழங்கி வைத்ததைத் தொடர்ந்து, சர்வமத தலைவர்களுக்கும் நூலின் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இன - மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும் எனும் கருப்பொருளை மையமாகக் கொண்ட எழுதப்பட்டுள்ள இப்புத்தகமானது நூலாசிரியரின் இரண்டாவது நூலாக திகழ்கின்றது. கடந்த 2019 ஆண்டு இடம் பெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பாக இராஜாங்க அமைச்சரினால் அவதானிக்கப்பட்ட விடயங்களின் தொகுப்பாக இந்நூல் எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்ப நூல் நிலையம்
இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வள்ளிபுரம் கணகசிங்கம், இராஜாங்க அமைச்சரின் தாயார் கமலா சிவநேசதுரை உள்ளிட்ட திணைக்கள தலைவர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

இராஜாங்க அமைச்சர் சிறைவாசம் அனுபவித்த போது அவரது முதல் நூலான வேட்கை எனும் நூல் எழுதப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.
இதேவேளை சிறந்த கல்விச் சமூகத்தை கட்டியெழுப்பும் நோக்கில் ஆசியாவின் அதி நவீன தொழில் நுட்ப வசதிகளை கொண்ட பாரிய நூல் நிலையமொன்றினை இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பில் அமைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri