மக்களின் குறைபாடுகளை தீர்த்து வைப்பது தொடர்பில் கிழக்கு ஆளுநர் விசேட கலந்துரையாடல் (Photos)
கிழக்கு மாகாணத்திலுள்ள ஜக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் ஆளுநருக்கு இடையில் மக்களின் குறைபாடுகளை தீர்த்து வைப்பதற்குரிய விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில் நேற்றையதினம் (23.06.2023) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்தே ரங்கே பண்டார அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் பங்கேற்புடன் இவ்விசேட உயர்மட்ட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
விரைவான தீர்வு
இதன்போது கட்சியின் அமைப்பாளர்கள் தங்களது பகுதிகளில் காணப்படும் மக்களின் குறைபாடுகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து உங்களது கோரிக்கைகளை கட்சியின் ஊடாக தமது அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும் போது அதனை விரைவாக தீர்த்து தருவதாகவும் ஆளுனர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள் என்ற அடிப்படையில் எதிர்காலத்தில் தமது அபிவிருத்தி திட்டங்களை கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஐக்கிய தேசிக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இதன்போது தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
















விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri

சீனாவிற்கு கிடைத்த பேரிடி... ஐபோன் 17 உற்பத்தியை இந்த நாட்டிற்கு மாற்ற ஆப்பிள் திட்டம் News Lankasri
