கிழக்கில் ஆளணி பற்றாக்குறைகளுக்கான முக்கியமான காரணங்களை சுட்டிக்காட்டிய ஸ்ரீநாத் எம்.பி
கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களில் காணப்படுகின்ற ஆளணி பற்றாக்குறைகளே உட்கட்டமைப்பு பற்றாக்குறைகளுக்கு முக்கியமான காரணங்களாக காணப்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு- வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் (13) நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழு கூடத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபைகள் அதி கூடிய அதிகாரங்களுடன் போதியளவு நிதி வளத்துடன் இயங்குமேயானால் மாகாண சபைகளுக்கு உள்ளே காணப்படுகின்ற சகல நிறுவனங்களும் ஆளணி பற்றாக்குறையற்ற, நிர்வாகதிறன் உள்ள மக்கள் சேவையுள்ள, அலுவலகங்களாக இயக்கும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுவாக்கெடுப்பு சின்னத்திற்கான போட்டி: நீடிக்கப்பட்டுள்ள கால அவகாசம்
குறைபாடுகள்
மத்திய அரசின் கீழ் உள்ள நிறுவனங்களில் மேலதிக ஆளணிகளும், மேலதிக பண வளமும் வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கப்படும் நிதியினால் மேற்கொள்ளப்படுகின்றன.
மாகாண சபையில் உள்ள நிறுவனங்களுக்கு இவ்வாறான வளங்கள் பகிர்ந்தளிக்கப்படாமையே உரிய காரணமாகும்.
இவ்வாறான குறைகளைக் களைந்து கிழக்கு மாகாணம் வினைத்திறன் உள்ள சேவையை வழங்கக்கூடிய ஓர் அரச நிர்வாக கட்டமைப்புக்கு உட்படுத்த வேண்டுமானால், அதிகூடிய அதிகார பரவலாக்கலும், போதியளவு நிதி ஒதுக்கீடும் மத்திய அரசாங்கத்திடம் இருந்து எமக்கு கிடைக்கப் பெறவேண்டும்.
வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் உள்ள ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், கட்டமைப்பு வசதிகளின் பலவீனங்கள், பலவற்றையும் நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டியுள்ளது என இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



