மியன்மாரில் மீண்டும் பதிவான நிலநடுக்கம்
மியன்மாரில் இன்று (13) அதிகாலை 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 35 கிமீ (21.75 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே ஹாங் சன் மாகாணத்திலிருந்து வடமேற்கே சுமார் 271 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 468 பின்அதிர்வுகள்
தாய்லாந்தின் சியாங் மாய் மற்றும் சியாங் ராய் ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக கூறப்படுகிறது.
According to China Earthquake Networks Center reported, a 5.4-magnitude earthquake in Myanmar on Sunday at 10:24 am, with a focal depth of 20 kilometers. #LatestNews pic.twitter.com/7MR8hjvC0k
— China News 中国新闻网 (@Echinanews) April 13, 2025
இதற்கிடையில், ஒரு அறிக்கையின்படி, மார்ச் 28 ஆம் திகதி ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு நேற்று வரை மியன்மார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 468 பின்அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
தஜிகிஸ்தான்
இதேவேளை தஜிகிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
EQ of M: 6.1, On: 13/04/2025 09:54:02 IST, Lat: 38.86 N, Long: 70.61 E, Depth: 10 Km, Location: Tajikistan.
— National Center for Seismology (@NCS_Earthquake) April 13, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjcVGs @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/BMcX9wiptO
தஜிகிஸ்தான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (13) காலை 9:54 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan

முதன்முறையாக தனது மகளின் முகத்தை காட்டி போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. செம ஸ்டில்ஸ் Cineulagam
