துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்! அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்
துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் துருக்கியில் வாழும் இலங்கையர்கள் தொடர்பில் அங்குள்ள இலங்கை தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய துருக்கியில் வாழும் இலங்கையர்களில் ஒருவரே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இலங்கையர்
துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி உருகொடவத்த இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் 9 இலங்கையர்கள் இருப்பதாகவும் அவர்களில் 8 பேருடன் இதுவரை தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்த 9 பேரில் ஒருவர் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்ததாகவும் ஆனால் இந்த சம்பவத்தின் போது அவர் அங்கு இல்லை என தெரிவிக்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
