கிழக்கு துருக்கியில் நிலநடுக்கம்
கிழக்கு துருக்கியின் மலாத்யா மாகாணத்தில் இன்று 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
எனினும், சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை.
முற்பகல் 10:46 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு சமாந்தரமாக சிரியாவின் ஹசாகா, டெய்ர் அல்-ஜோர் மற்றும் அலெப்போ மாகாணங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்த நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சேத விபரங்கள்
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி பூமிக்கு அடியில் 9 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
Three people narrowly avoided debris falling from a rooftop during an earthquake in southeast Turkey, CCTV footage from the scene showed. pic.twitter.com/nos9aRuk6B
— ABC News (@ABC) October 16, 2024
எனினும், இந்த அதிர்விலும் சேத விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |