ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. கெமராவில் பதிவான திகிலூட்டும் காட்சிகள்
ஜப்பானில் நேற்றைய தினம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போது கெமராக்களில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
ஜப்பான் கடற்கரையில் நேற்று 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன்போது, 23 பேர் காயமடைந்திருந்ததுடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
சுனாமி எச்சரிக்கை
அந்நாட்டு செய்திகளின் படி, 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக 10 அடி உயரம் வரை அலைகள் எழும்பும் என்று சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Japan: The moment the M7.6 earthquake hit Hachinohe City - captured from the Aomori Asahi Broadcasting Hachinohe branch office 👀pic.twitter.com/ppJdYIxwoo
— Volcaholic 🌋 (@volcaholic1) December 8, 2025
தொடர்ந்து, சில மணிநேரங்களுக்குப் பிறகு, குறித்த எச்சரிக்கை பாதுகாப்பு ஆலோசனைகளாகக் குறைக்கப்பட்டன.
இந்நிலையில், ஹொக்கைடோ, அமோரி மற்றும் இவாட் மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன, மேலும் பல துறைமுகங்களில் 20 முதல் 70 செ.மீ (7 முதல் 27 அங்குலம்) உயரம் வரை சுனாமிகள் காணப்பட்டதாக ஜே.எம்.ஏ தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 80 கிமீ (50 மைல்) தொலைவில், 50 கிமீ (30 மைல்) ஆழத்தில் இருந்ததாக ஜேஎம்ஏ தெரிவித்துள்ளது.