ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! அண்டை நாடுகளிலும் தாக்கம்
ஆப்கானிஸ்தானில் (Afghanistan) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கமானது இன்று (19) நண்பகல் 12:17 மணியளவில் ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லை பகுதியில் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கம் பூமிக்கு 130 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, வட இந்தியா மற்றும் பாகிஸ்தானிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் சில குலுங்கியுள்ள நிலையில் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
