ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் பகுதியில் 4.1 ரிக்டர் அளவில் இன்று(02.03.2023) நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிறுவகம் தெரிவித்துள்ளது.
அதிகாலை 2.35 மணியளவில் பைசாபாத்தில் இருந்து வடகிழக்கே 267 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
Earthquake of Magnitude:4.1, Occurred on 02-03-2023, 02:35:57 IST, Lat: 37.73 & Long: 73.47, Depth: 245 Km ,Location: 267km ENE of Fayzabad, Afghanistan for more information Download the BhooKamp App https://t.co/WlTpOROtRj@Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia @Indiametdept pic.twitter.com/JOu00tVO8v
— National Center for Seismology (@NCS_Earthquake) March 1, 2023
அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம்
இதேவேளை தஜிகிஸ்தானில் முர்கோப் எனும் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி பாரிய நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நிமிடங்கள் கழித்து ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அடுத்தடுத்து 4 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.