பசுபிக் தீவு ஒன்றில் மீண்டும் எரிமலை வெடிப்பு! சுனாமி எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்து சிதறியதை அடுத்து ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பசுபிக் பெருகடலில் அமைந்துள்ள தீவான டொங்காவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்த நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன.
இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளன..
இந்தநிலையில், அந்த தீவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்துள்ளது.
இதனால், கடலில் சுனாமி( ஆழிப்பேரலை) அலை உருவானது. சுனாமி அலைகள் டொங்கா தீவில் மக்கள் வசிக்கும் பகுதிகளை பாதித்தன.
தற்போது மீண்டும் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் பெரிய அளவிலான சுனாமி அலைகள் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.
அதற்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




₹25 கோடி லாஸ் ஏஞ்சல்ஸ் சொகுசு பங்களா முதல் ₹3 கோடி மெர்சிடிஸ் கார் வரை! ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்டமான வாழ்க்கை News Lankasri

புதிய சீரியலில் நாயகனாக நடிக்கும் முத்தழகு சீரியல் நடிகர்.. யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam
