இந்தியா தொடர்பில் விமல் வீரவன்ச விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் ஈ-தேசிய அடையாள அட்டை திட்டத்திற்கான ஒப்பந்தம் இந்தியாவிற்கு வழங்கப்படுவது குறித்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈ-தேசிய அடையாள அட்டை (e-NIC) திட்டத்துக்கான ஒப்பந்தம் இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருப்பது, நாட்டின் தனிப்பட்ட தரவுகளை ஆபத்தில் வீழ்த்தும் செயல் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியலாப நோக்கமற்ற நிறுவனமொன்றிடம் ஒப்பந்தம் வழங்கப்படுவதால், இலங்கை பிரஜைகளின் விரல்அடையாளம், கண் விழித்திரை தகவல்கள், முகவரி உள்ளிட்ட தகவல்கள் உள்ளிட்ட மிக நுணுக்கமான பயனாளர் தரவுகள் இந்தியாவுக்கு அனுப்பப்படலாம்," என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புரிந்துணர்வு உடன்படிக்கை
2021இல், கடந்த அரசாங்கத்தின் காலத்தில், ஆட்பதிவு திணைக்களமும், இந்திய நிறுவனமும் அதிகாரபூர்வமாக புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டதாகவும், அது அமுல்படுத்தப்படாமல் இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
அப்போதைய ரணில் விக்ரமசிங்க அரசாங்கம், 2023ம் ஆண்டு 30 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்து திட்டத்தை மீண்டும் ஆரம்பித்தது, இப்போது வரை இந்த திட்டத்தின் 99% இற்கும் மேலான தொழில்நுட்ப பகுதி, 500 கோடி ரூபாவினை பயன்படுத்தி இலங்கையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
தேவையான அனைத்து உபகரணங்களும் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டுள்ளன," என விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.
ஆனால், தற்போதைய அரசு உள்நாட்டு திட்டத்தை புறக்கணித்து, இந்தியாவின் தேசிய திறன் தேசிய National Institute for Smart Government (NISG) நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்க முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் குறித்த நடவடிக்கைகள் முழுவதுமாக இந்தியாவில் நடத்தப்பட்டதாகவும், இலங்கை நிறுவனங்கள் பங்கேற்க முடியாத வகையில், இந்திய நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாகவும் வீரவன்ச குற்றம்சாட்டினார்.
தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்திய நிறுவனம் மக்கள் நகர்வு, குடியிருப்பு, மருத்துவத் தேவைகள் உள்ளிட்ட முக்கிய தரவுகளை அணுகும் உரிமை பெற்றுள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒப்பந்த நிபந்தனைகளின் படி, தரவு கசியும் பட்சத்தில் இந்திய நிறுவனம் 10வீதம் மட்டுமே பொறுப்பேற்கும், என அவர் குற்றம்சாட்டினார்.
இந்திய டிஜிட்டல் பொருளாதார அமைச்சு இந்நிகழ்வை ஏற்கனவே அங்கீகரித்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
ஆனால் இது எங்கள் தேசிய இறையாண்மைக்கும் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் எனவும் அரசாங்கம் உடனடியாக இந்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
