அநுர ஆட்சியிலும் தொடரும் கரிநாள் அனுஷ்ப்பு: பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

Sri Lanka Politician Sri Lankan protests Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Erimalai Feb 01, 2026 12:10 PM GMT
Report

இலங்கையின் சுதந்திர தினத்தை ஒரே ஒரு இனம் தான் கொண்டாடுவதாகவும், தமிழர்களுக்கு இலங்கையில் சுதந்திரம் இல்லை என்பதனால் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்குமாறும் சமூக செயற்பாட்டாளர் முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று(31.01.2026) தனது இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு மோட்டார் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஐந்து பேர் வைத்தியசாலையில்....!

இரண்டு மோட்டார் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஐந்து பேர் வைத்தியசாலையில்....!

பொதுமக்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் அடைந்ததற்கு பின்னர், அன்றிலிருந்து இன்று வரை அது ஒரு இனத்தினுடைய சுதந்திர தினமாகத் தான் கொண்டாடப்படுகிறது. தமிழ் மக்களை பொறுத்தவரை அல்லது ஏனைய சிறுபான்மை மக்களை பொறுத்தவரை இலங்கையினுடைய சுதந்திரதினம் ஒரு கரிநாளாகவே அனுஷ்டிக்கப்படுகிறது.

அநுர ஆட்சியிலும் தொடரும் கரிநாள் அனுஷ்ப்பு: பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் | E Muralitharan S Statement

இதற்கான காரணம் தமிழ் மக்களுக்கு எந்த வகையிலும் இலங்கையில் சுதந்திரம் இல்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தில் முழுமையாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள். வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அம்பாறையில் தமிழ் மக்கள் முற்று முழுதாக இடம்பெயர வைக்கப்பட்டனர்.

அதன் பின்னர், பதவியா குடியேற்றங்களை கொண்டு வந்து திருகோணமலை ஆக்கிரமிக்கப்பட்டது, யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது மணலாற்றில் இருந்த தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு அவர்களுடைய காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இன்றுவரை அந்த காணிகள் விடுவிக்கப்படவில்லை.

வடகிழக்கில் பெரும் அளவான தமிழ் மக்களுடைய காணிகள் இலங்கை முப்படைகளின் வசம் இருக்கிறது. மேலும், யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு முடிந்தவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

காணாமல் போனவர்கள் தொடர்பாக இன்று வரை எந்தவிதமான தகவலும் இல்லை, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்கப்படவில்லை, திட்டமிட்ட வகையில் சிங்கள குடியேற்றங்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

அநுர ஆட்சியிலும் தொடரும் கரிநாள் அனுஷ்ப்பு: பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் | E Muralitharan S Statement

இந்த நிலையில், எவ்வாறு இலங்கையில் சுதந்திர தினத்தை தமிழர்கள் கொண்டாடுவது? ஆகவே, இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக தமிழ் மக்கள் அனுஷ்டிக்க வேண்டும் கடந்த 2011ஆம் ஆண்டு வரை எந்த ஒரு தமிழ் கட்சிகளும் இலங்கையினுடைய சுதந்திர தினத்தில் கலந்து கொள்ளவில்லை.

மேலும், 2011ஆம் ஆண்டுக்கு பிற்பாடு தான் சம்பந்தன் தலைமையிலான அணி இரணிலுடைய ஆட்சியில் சுதந்திர தினத்தில் கலந்து கொண்டனர்.

எனவே, சில நாட்களில் இடம்பெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்கப்போகும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அனைத்து தமிழ் மக்களும் ஒத்துழைப்பு வழங்கி இலங்கையினுடைய சுதந்திர தினத்தை அனைவரும் கரிநாளாக அனுஷ்டிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.    

பிரதமர் ஹரிணி விவகாரத்தில் செய்வதறியாது தடுமாறும் எதிர் தரப்புக்கள்

பிரதமர் ஹரிணி விவகாரத்தில் செய்வதறியாது தடுமாறும் எதிர் தரப்புக்கள்

இன்றிரவு வரை 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு

இன்றிரவு வரை 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு

அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US