வெளிநாடு செல்வோரரின் ஆவணங்களை அத்தாட்சிப்படுத்த சனிக்கிழமைகளில் விசேட சேவை
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக செல்வோரின் ஆவணங்களை அவசரமாக அத்தாட்சிப்படுத்திக் கொள்வதை இலகுபடுத்தும் நோக்கில் சனிக்கிழமைகளில் விசேட சேவையை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அவ்வாறான சேவை தேவைப்படுவோரின் வசதிக்காக, வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இம்மாதத்தின் எஞ்சிய சனிக்கிழமைகளில் கீழ்க்கண்டவாறு சேவைகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இவ்விசேட சேவையானது பத்தரமுல்லையில் அமைந்துள்ள தூதரக விவகாரப் பிரிவின் தலைமை அலுவலகத்தில் மாத்திரமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேவை வழங்கப்படும் திகதிகள்
◾ ஒக்டோபர் 17 (17.10.2026): சனிக்கிழமை
◾ ஒக்டோபர் 24 (24.10.2026): சனிக்கிழமை
◾ ஒக்டோபர் 31 (31.10.2026): சனிக்கிழமை
◾ நேரம்: காலை 8:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை.

அவ்வாறு தங்கள் ஆவணங்களை அத்தாட்சிப்படுத்திக் கொள்வதற்காக இச்சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு முன்கூட்டியே நேரத்தை ஒதுக்குவது (Appointment) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் ஊடாக 'e-Channeling' முறைமையைப் பயன்படுத்தித் தமது நேர ஒதுக்கீட்டை இணையவழியில் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
நேர ஒதுக்கீட்டுக்கான இணைப்பு : https://www.echannelling.com/ministry-of-foreign-affairs/H533