பண்டிகைக் கால விலையேற்றத்திற்கு முற்றுப்புள்ளி! சதொச ஊடாக அதிரடி நடவடிக்கை
பண்டிகை காலங்களில் பொருட்களை நியாயமான விலையில் சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, தெரிவித்துள்ளார்.
நேற்று (31-10-2026 பகல் கிளிநொச்சி மாவட்ட செயலக மண்டபத்தில் பனை தென்னை வள கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பணியாளர்களையும் கூட்டுறவுத்துறைகள் அதிகாரிகளையும் கூட்டுறவுத் துறை சார்ந்து சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.
பொருட்களின் விலை
இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

பனை சார் உற்பத்தி பொருட்களை சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக சந்தை வாய்ப்பை ஏற்படுத்தவும் நவீன தொழில் வசதிகளை பெற்று கொடுத்து அதனை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்த அவர் தற்போது பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் பொருட்களின் விலை அதிகரித்திருப்பதன் காரணமாக நியாய விலை மக்களுக்கு பொருட்கள் சென்றடைய கூடிய வகையில் சதொச ஊடாகவும் பொருட்களை வழங்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்ரமணியம் முரளிதரன் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தினுடைய மாவட்ட இணைப்பாளர் மருங்கள் மோகன் மற்றும் துறை சார்ந்த திணைக்களங்களின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ரூ. 634 கோடிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... ஊழல் குறித்து சீரியல் நடிகை ஜனனி அசோக் Cineulagam
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
பாக்ஸ் ஆபிஸ்- ஆந்திராவில் முதல் தமிழ் திரைப்படம் செய்துள்ள சாதனை... ரஜினியின் ஜெயிலர் 2 செய்த ஆல்டைம் ரெக்கார்ட் Cineulagam