துமிந்த நாகமுவ தொடர்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
முன்னணி சோசலிஸ்ட் கட்சி பிரசார செயலாளர் துமிந்த நாகமுவவின் மனைவி இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தின் படி உடனடியாக துமிந்த நாகமுவை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ள துமிந்த நாகமுவவின் மனைவி நைதலகே துலானி பிரியங்கிகா, தமது மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சிரேஷ்ட காவல்துறை அதிபர் தேசபந்து தென்னகூன், கொம்பனி வீதி காவல் நிலைய பொறுப்பாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ஆகியோரை பெயரிட்டுள்ளார்.
அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் இரண்டு ஊழியர்கள் அரசியல் அடிப்படையில் இடைநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோது ஜூலை 7ம் திகதி துமிந்த நாகமுவ மற்றும் ஏழு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட பின்னர் துமிந்த நாகமுவவும் மற்றவர்களும் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறிச் சென்று கொண்டிருந்தபோது, காவல்துறை அதிகாரிகள் ஒரு குழு அவர்களைத் தடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்குக் கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமது கணவர் தொடர்பில் எந்த ஆவணமும் கொடுக்கப்படவில்லை அல்லது காட்டப்படவில்லை என்றும் மனுதாரர் கூறியுள்ளார்.
தகவல்களின்படி, துமிந்த நாகமுவ தற்போது கண்டி பல்லேகல இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர், தமது ஆட்கொணர்வு மனுவில் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
